Home Featured உலகம் ஈரான் முன்னாள் அதிபர் ரப்சஞ்சானி காலமானார்!

ஈரான் முன்னாள் அதிபர் ரப்சஞ்சானி காலமானார்!

971
0
SHARE
Ad

akbar-hashemi-rafsanjani-iranடெஹ்ரான் – 1989ஆம் ஆண்டு முதல் 1997 வரை இரண்டு தவணைகளுக்கு ஈரானின் அதிபராகப் பதவி வகித்த மத குருவான அக்பர் ஹாஷ்மி ரப்சஞ்சானி (படம்) நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 8) தனது 82-வது வயதில் டெஹ்ரானில் காலமானார்.

அதிபர் பதவியிலிருந்து விலகிய பின்னரும் ஈரானின் அதிகார சக்திகள் வாய்ந்த இரண்டாவது முக்கிய நபராக அவர் விளங்கினார்.

ஈரானின் சக்தி வாய்ந்த முதல்நிலை மதகுருவான அயோத்துல்லா அலி காமெனிக்கு அடுத்த நிலையில் இரண்டாவது சக்தி வாய்ந்த மத குருத் தலைவராக ரப்சஞ்சானி பார்க்கப்பட்டார்.