Home Featured கலையுலகம் கோல்டன் குளோப் விழா: சிறந்த 10 அழகிகளில் ஒருவராக பிரியங்கா சோப்ரா!

கோல்டன் குளோப் விழா: சிறந்த 10 அழகிகளில் ஒருவராக பிரியங்கா சோப்ரா!

1025
0
SHARE
Ad

golden-globes-priyanka-chopra-jpg-featureலாஸ் ஏஞ்சல்ஸ் – நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இங்கு நடைபெற்ற கோல்டன் குளோப் விருதளிப்பு விழாவில் ஹாலிவுட்டின் அழகுப் பதுமை நடிகைகள் வரிசையாக அணிவகுத்து வந்தனர்.

அவ்வாறு வந்த அழகு நட்சத்திரங்களில் சிறந்த முறையில், அழகான ஆடையலங்காரத்துடன் வந்த முதல் பத்து நடிகைகளில் ஒருவராக இந்திப்பட நடிகையான பிரியங்கா சோப்ராவை ஊடகங்கள் தேர்வு செய்துள்ளன.

priyanka-chopra-golden-globe-awards-2017பொன்னிற உடையில் அழகு காட்டி, சிவப்புக் கம்பள வரவேற்பில் வலம் வந்த பிரியங்கா சோப்ரா…

#TamilSchoolmychoice

தொலைக்காட்சி ஆங்கிலப் படத்தொடரான ‘குவாண்டிகோ’-வில் நடித்ததன் மூலம் ஹாலிவுட் படவுலகையும், உலகம் எங்கும் உள்ள ஆங்கிலப் பட இரசிகர்களையும் கவர்ந்துள்ள பிரியங்கா, தற்போது ‘பேவாட்ச்’ எனப்படும் கடற்கரையோர சுற்றுலாப் பயணிகளைக் காப்பாற்றும் நீச்சல் பாதுகாவலர்களைக் கதாபாத்திரங்களாகக் கொண்ட தொடரில் நீச்சலுடையில் கலக்கி வருகின்றார்.

கோல்டன் குளோப் விருதுகள் ஹாலிவுட்டில் இயங்கி வரும் வெளிநாட்டுப் பத்திரிக்கையாளர்களின் சங்கத்தினரால் நடத்தப்படும் விழாவாகும். இதில் 25-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் சிறந்த திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.

ஆஸ்கார் விருதுகளுக்கு முன்பாக நடத்தப்படும் கோல்டன் குளோப் விருதுகள் விழா அடுத்து வரும் ஆஸ்கார் விருதளிப்பில் எந்தப் படங்கள் வெற்றியடையக் கூடும் என்பதை எடுத்துக் காட்டும் வகையில் அமையும்.

இந்த முறை கோல்டன் குளோப் விருதளிப்பு விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருதை பிரபல ஹாலிவுட் நடிகை மெரில் ஸ்ட்ரீப் பெற்றார்.

priyanka-chopra-merryl-streepவாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற மெரில் ஸ்ட்ரீப்புடன் பிரியங்கா சோப்ரா…