Home Featured இந்தியா ‘சென்னையை நவீனமயமாக்கும் திட்டம்’ – தமிழக முதல்வரைச் சந்திக்கிறார் சாமிவேலு!

‘சென்னையை நவீனமயமாக்கும் திட்டம்’ – தமிழக முதல்வரைச் சந்திக்கிறார் சாமிவேலு!

827
0
SHARE
Ad

samiveluபெங்களூர் – சென்னையை நவீனமயமாக்குவது, குறைந்த விலை வீடமைப்புத் திட்டம், சாலை நிர்மாணிப்பு உள்ளிட்ட 7 துறைகளை மேம்படுத்துவதில் தமிழக அரசிடம் மலேசியா சில பரிந்துரைகளைச் செய்திருந்தது.

அத்திட்டங்கள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த, வரும் ஜனவரி 11-ம் தேதி, புதன்கிழமை, தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை தான் சந்திக்கவுள்ளதாக, இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான மலேசியக் கட்டமைப்புத் துறை சிறப்புத் தூதர் டத்தோஸ்ரீ உத்தாமா சாமிவேலு இன்று திங்கட்கிழமை பெங்களூர் பிரவாசி மாநாட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த போது தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதாவிடம் ஏற்கனவே அத்திட்டங்கள் குறித்த பரிந்துரைகள் வழங்கப்பட்டிருந்ததாகவும், ஆனால் அவரது திடீர் மறைவால், தமிழகத்தில் பதவி மாற்றங்கள் ஏற்பட்டதையடுத்து, தற்போது மீண்டும் அது குறித்து நடப்பு தமிழக முதல்வருடன் கலந்தாலோசிக்க சென்னை செல்வதாகவும் சாமிவேலு தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மேலும், சென்னையை நகரமயமாக்குவதில் உலகத்திலேயே மலேசியாவுக்குத் தான் மிகச் சிறந்த அனுபவமும், திறனும் இருக்கின்றது என்றும் சாமிவேலு குறிப்பிட்டார்.

செய்தி – ஃபீனிக்ஸ்தாசன்