Home Featured நாடு துணைப் பிரதமர் சீனாவுக்கு அலுவல் வருகை!

துணைப் பிரதமர் சீனாவுக்கு அலுவல் வருகை!

753
0
SHARE
Ad

zahid-hamidi-arrives-china

பெய்ஜிங் – துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹாமிடி 6 நாள் அலுவல் வருகை மேற்கொண்டு இன்று சீனாவின் தலைநகர் பெய்ஜிங் வந்தடைந்தார்.

சில மாதங்களுக்கு முன்னர் பிரதமர் நஜிப் துன் ரசாக் மேற்கொண்ட சீன வருகையின் தொடர்ச்சியாக துணைப் பிரதமரின் இந்த வருகை அமைந்துள்ளது.

#TamilSchoolmychoice

பெய்ஜிங் வந்தடைந்த சாஹிட் ஹாமிடியை மலேசியத் தூதரக அதிகாரிகள் வரவேற்றனர்.

சீனாவின் பிரதமர் உட்பட பல முக்கியத் தலைவர்களைச் சந்தித்து சாஹிட் இருநாடுகளுக்கிடையிலான நட்புறவு குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார்.