Home Featured உலகம் பேஸ்புக் நேரலையில் வந்து தற்கொலை செய்து கொண்ட 12 வயது பெண்!

பேஸ்புக் நேரலையில் வந்து தற்கொலை செய்து கொண்ட 12 வயது பெண்!

715
0
SHARE
Ad
Katelynமியாமி – அமெரிக்காவைச் சேர்ந்த 12 வயது இளம் பெண், பேஸ்புக் நேரலையில் தற்கொலை செய்து கொண்டது, தற்போது நட்பு ஊடகங்களில் பரபரப்பாகப் பகிரப்பட்டு வருகின்றது. அவர் தற்கொலை செய்து கொள்ளப் போவது தெரிந்தும் கூட தங்களால் எதுவும் செய்ய இயலவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் 30-ம் தேதி, வடக்கு ஜார்ஜியாவைச் சேர்ந்த கேட்லின் நிக்கோல் டேவிஸ் என்ற பெண் பேஸ்புக்கில் நேரலையில் வந்தார். பின்னர் தனக்கு முன்பு கேமராவைப் பொருத்திவிட்டு, கழுத்தில் கயிற்றை இருக்கி தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன், “எல்லாவற்றுக்கும் என்னை மன்னியுங்கள், உண்மையில் மன்னியுங்கள். ஆனால் என்னால் எதுவும் பண்ண முடியவில்லை” என்று கண்ணீருடன் கூறினார்.
டேவிஸ் தற்கொலை செய்து கொள்வதற்கு சில நாட்களுக்கு முன்பு தனது உறவினர் ஒருவரால் தான் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக காணொளி ஒன்றை வெளியிட்டிருந்ததாக ரோமைச் சேர்ந்த நியூஸ் டிரிபூன் தெரிவித்துள்ளது.