Home Featured நாடு சரவாக்கில் புதிய முதலமைச்சர் வெள்ளிக்கிழமை பதவியேற்கிறார்!

சரவாக்கில் புதிய முதலமைச்சர் வெள்ளிக்கிழமை பதவியேற்கிறார்!

1100
0
SHARE
Ad

SARAWAK-FLAG-PNGகூச்சிங் – சரவாக்கின் புதிய முதலமைச்சர் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 4 மணியளவில், ஆஸ்தானாவில், அம்மாநில ஆளுநர் துன் அப்துல் தாயிப் மாஹ்முட்டின் அதிகாரப்பூர்வ மாளிகையில், பதவியேற்கிறார்.

சரவாக் முதலமைச்சர் டான்ஸ்ரீ அட்னான் சாத்திம் கடந்த புதன்கிழமை காலமானதையடுத்து, அவரது பதவிக்கு மூன்று பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

அவை, பிபிபி துணைத் தலைவர் டத்தோ அமர் அபாங் ஜோஹாரி துன் ஓபெங், உதவித் தலைவர்கள் டத்தோ அமர் டக்ளஸ் உகா மற்றும் டத்தோ அமர் அவாங் தெங்கா அலி ஹசான் ஆகியோர் ஆவர்.

#TamilSchoolmychoice

எனினும், புதிய முதலமைச்சர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில மணி நேரங்களில் வெளிவரலாம்.