கோலாலம்பூர், மார்ச்-21- நமது நாட்டின் வளர்ச்சிக்கு செம்பனை மிகப் பெரிய முலதனமாக விளங்குகிறது.
செம்பனை தொழில்துறையில் உள்ள வாய்ப்புகளையும் முன்னேற்றங்களையும் முழுமையாக அறிந்திராத காரணத்தினாலேயே குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் மட்டுமே இத்துறையில் கால் பதித்துள்ளனர்.
எதிர்வரும் 28.3.2013 வியாழக்கிழமை மாலை 6.30 மணி தொடங்கி இரவு 10.00 மணி வரையில் மலேசிய இந்திய தொழில் முனைவர் கூட்டுறவுக் கழகத்தின் ஏற்பாட்டில் ‘செம்பனை எண்ணெய் தொழில்துறையில் முதலீடும் வாய்ப்புகளும்’ என்ற தலைப்பிலான வர்த்தக கலந்துரையாடல் நடைபெறவிருக்கிறது.
மலேசிய இந்திய தொழில் முனைவர் கூட்டுறவுக் கழகத்தின் உறுப்பினர்களுக்கு 50 வெள்ளி ரிங்கிட்டும், உறுப்பினர் அல்லதாவர்களுக்கு 100 வெள்ளி ரிங்கிட்டும் கட்டணமாக விதிக்கப்பட்டுள்ளது. இக்கலந்துரையாடல் ஜாலான் பார்லிமெண்ட், ரோயல் லேக் கிளப், தி ஆர்க்கிட் அறையில் நிகழவுள்ளது.
எதற்காக செம்பனை துறையில் முதலீடு செய்ய வேண்டும் என்பது குறித்து டான்ஸ்ரீ டத்தோ கிருஷ்ணன் டான், டாக்டர் கல்யாண சுந்தரம், எம்.ஆர்.சந்திரன், வெங்கட செல்லம், காவ் சீ மிங் உள்ளிட்டோர் பேசவிருக்கின்றனர்.
மேல் விவரங்களுக்கு ஜான்சி 03-67334533, எலிசபெத் 016-2258797, மது மாரிமுத்து 019-318 9232 மற்றும் madhu1717@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியின் மூலம் தொடர்பு கொள்ளலாம்.