Home Featured தமிழ் நாடு ஜல்லிக்கட்டு: அண்மைய நிலவரச் செய்திகள்!

ஜல்லிக்கட்டு: அண்மைய நிலவரச் செய்திகள்!

643
0
SHARE
Ad

jallikattu-protests-marina beach

சென்னை : தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களால் கொந்தளிப்பான சூழ்நிலை நிலவுகின்றது. இது குறித்த அண்மைய நிலவரச் செய்திகளின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

  • ஏறத்தாழ 50 ஆயிரம் முதல் 1 இலட்சம் பேர்வரை மெரினா கடற்கரைப் பகுதியில் திரண்டிருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன (மேலே படம்).
  • இன்று புதன்கிழமை இரவே, தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அரசாங்கக் குழுவினருடன் புதுடில்லி புறப்பட்டுச் செல்கின்றார்.
  • நாளை வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் பிரதமர் மோடியை பன்னீர் செல்வம் சந்திக்கின்றார். அந்தச் சந்திப்பின்போது, ஜல்லிக்கட்டுவை நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டு வரப்பட வேண்டுமென பன்னீர் செல்வம் பிரதமரிடம் வலியுறுத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • நாளை தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளதால், மேலும் பல மாணவர்கள் ஆயிரக்கணக்கில் மெரினாவில் நாளை கூடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகின்றது.
  • மெரினா கடற்கரைப் பகுதியில் இருளடைந்துள்ளதால், ஆர்ப்பாட்டக்காரர்களில் பலர் கலைந்து செல்லத் தொடங்கியுள்ளனர். அவர்கள் நாளை மீண்டும் திரும்புவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
  • சென்னையில் கணினித் தொழில்நுட்ப வல்லுநர்கள் பணியாற்றும் டைடல் பார்க் வளாகத்திலும், கணினித் தொழில்நுட்பப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

jallikattu-chennai-tidal park-protestsடைடல் பார்க் வளாகத்தில் நிகழ்ந்த ஆர்ப்பாட்டங்கள்…

  • மெரினாவில் இன்னும் ஆயிரக்கணக்கானோர், நடைபாதைகளில் அமைதியான முறையில் அமர்ந்து தங்களின் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். மீண்டும் ஜல்லிக்கட்டு கொண்டுவரப்படும் வரை மெரினா கடற்கரையை விட்டு நகரமாட்டோம் என்று போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.
  • இதற்கிடையில் அலங்காநல்லூர் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு ஆர்ப்பாட்டம் நடக்கும் பகுதிகளில் காவல் துறையினர்கூட உள்ளே நுழைய முடிவில்லை என்றும், கூட்டத்தினரை ஆர்ப்பாட்டக்காரர்களே ஒழுங்குபடுத்தி வருகின்றனர் என்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.