Home Featured தமிழ் நாடு ஜல்லிக்கட்டு: போராட்டம் தமிழகம் எங்கும் பிரம்மாண்டமாக விரிவடைகிறது!

ஜல்லிக்கட்டு: போராட்டம் தமிழகம் எங்கும் பிரம்மாண்டமாக விரிவடைகிறது!

814
0
SHARE
Ad

jallikkattu logo

சென்னை – தமிழகம் எங்கும் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் பல்வேறு அமைப்புகளும் இணைந்துள்ளதால், தற்போது இந்தப் போராட்டம் தமிழகத்தின் பல பகுதிகளிலும் விரிவடைந்து, மிகப் பிரம்மாண்டமானதாக உருவெடுத்துள்ளது.

இதன் தொடர்பிலான அண்மையச் செய்திகள் பின்வருமாறு:

  • நாளை வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும் முழு கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என தமிழ் நாடு வணிகர் சங்கம் அறிவித்துள்ளது.
  • இன்று வியாழக்கிழமை தமிழகத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
  • வெள்ளிக்கிழமை காலை 6.00 மணி முதல் 6.00 மணி வரை லாரிகள் தமிழகத்தில் ஓடாது என அறிவித்து லாரி உரிமையாளர்கள் சங்கமும் போராட்டத்தில் குதித்துள்ளது.
  • திரைப்பட இயக்குநர்கள் சங்கம் இன்று வியாழக்கிழமை வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர். இதனால் இன்று முழுவதும் தமிழ்ப் படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாது.
  • நாளை வெள்ளிக்கிழமை தென்னிந்திய நடிகர் சங்கத்தினர் காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை உண்ணாவிரதப் போராட்டத்தை தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டிட வளாகத்தில் நடத்துகின்றனர் என அந்த சங்கத்தின் சார்பில் நடிகர் பொன்வண்ணன் அறிவித்துள்ளார்.