Home Featured தமிழ் நாடு மோடியைச் சந்திக்கிறார் ஓபிஎஸ்: சாதகமான முடிவுடன் திரும்புவாரா?

மோடியைச் சந்திக்கிறார் ஓபிஎஸ்: சாதகமான முடிவுடன் திரும்புவாரா?

440
0
SHARE
Ad

opsபுதுடெல்லி – ஜல்லிக்கட்டு விவகாரத்தில் ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஒன்று திரண்டு தங்களது ஆதரவைத் தெரிவித்து வருவதால், இன்று வியாழக்கிழமை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கும் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், ஜல்லிக்கட்டு தடையை நீக்கும் அவசர சட்டத்தைப் பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கவுள்ளார்.

அவரது கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டால், சாதகமான முடிவுடன் பன்னீர் செல்வம் இன்று தமிழ்நாடு திரும்ப வாய்ப்புள்ளது. அறிவிப்பு பாதகமாக அமைந்தால், எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவது போல், போராட்டம் இன்னும் வலுவடையவும் வாய்ப்புள்ளது.

எனவே, இன்று ஓ.பன்னீர்செல்வம் அறிவிக்கும் முடிவிலேயே ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழர்களின் ஒட்டுமொத்த மகிழ்ச்சியும் அடங்கியுள்ளதாக நம்பப்படுகின்றது.

#TamilSchoolmychoice

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழ்நாடு மட்டுமல்ல மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, மெக்சிகோ என 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் வாழும் தமிழர்களிடமிருந்தும் ஆதரவு பெருகி வருவது குறிப்பிடத்தக்கது.