புதுடில்லி – சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக் மீது விசாரணை நடத்தி வரும் இந்திய அரசாங்கத்தின் மத்திய புலனாய்வுத் துறை, அவரது 78 வங்கிக் கணக்குகளை குறிவைத்து விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளது.
இந்த வங்கிக் கணக்குகள் முடக்கப்படலாம் என இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.
இதற்கிடையில், ஜாகிர் நாயக் நடத்தி வந்த அரசு சார்பற்ற இயக்கங்கள் மூலமாக சுமார் 100 கோடிக்கும் மேற்பட்ட மதிப்பிலான முதலீடுகள் நிலம், கட்டிடங்கள் மீது செய்யப்பட்டுள்ளதால் இவை குறித்தும் விசாரணைகள் தொடர்கின்றன.