Home Featured வணிகம் அதிக எடை கொண்ட 57 ஏர் இந்தியா விமானப் பணியாளர்கள் பணிமாற்றம்!

அதிக எடை கொண்ட 57 ஏர் இந்தியா விமானப் பணியாளர்கள் பணிமாற்றம்!

740
0
SHARE
Ad

air india2புதுடெல்லி – இந்திய அரசு விமான நிறுவனமான ஏர் இந்தியா, தனது விமானப் பணியாளர்களில் அதிக எடையுடன் இருந்த 57 பேரை விமானப் பணிகளிலிருந்து தரைப் பணிகளுக்கு மாற்றம் செய்திருக்கிறது.

விமானப் பணிப்பெண்கள் உட்பட விமானப் பயணத்தில் சேவைப் பிரிவில் இருந்த அப்பணியாளர்களுக்கு உடல் எடையைக் குறைத்து நல்ல வடிவத்துடன் திரும்ப கால அவகாசம் அளித்துள்ளது ஏர் இந்தியா.

அவ்வாறு வடிவான உடல் அமைப்புக்கு வந்தால் மட்டுமே விமானத்தில் பணிகள் வழங்குவதாகவும், இல்லையென்றால் தரைப்பணிகள் நிரந்தரமாக்கப்படும் என்றும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

தற்போது, 3,800 பணியாளர்கள் உள்ள ஏர் இந்தியா நிறுவனத்தில் 2,500 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.