Home Featured கலையுலகம் ரஜினி, அஜித், சூர்யா என முன்னணி நடிகர்கள் போராட்டத்தில் குதித்தனர்!

ரஜினி, அஜித், சூர்யா என முன்னணி நடிகர்கள் போராட்டத்தில் குதித்தனர்!

1223
0
SHARE
Ad

Rajiniசென்னை – ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம் இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் போராட்டத்தை துவங்கியுள்ளது.

இப்போராட்டத்தில் முதல் ஆளாக வந்து கலந்து கொண்டார் நடிகர் அஜித், அவரைத் தொடர்ந்து நடிகர் சூர்யா, சத்யராஜ், சிவக்குமார், கார்த்தி என பலர் கலந்து கொள்ளத் தொடங்கினர்.

இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு தனது ஆதரவைத் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இதனிடையே, நடிகர் லாரன்ஸ் மக்களோடு மக்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.