Home Featured தமிழ் நாடு ஜல்லிக்கட்டு போராட்டம்: வாகனங்களுக்கு போலீசாரே தீ வைத்தனரா? (காணொளி)

ஜல்லிக்கட்டு போராட்டம்: வாகனங்களுக்கு போலீசாரே தீ வைத்தனரா? (காணொளி)

833
0
SHARE
Ad

சென்னை – நேற்று திங்கட்கிழமை ஜல்லிக்கட்டுப் போராட்டம் உச்சத்தை எட்டிய நிலையில், காவல்துறையினர் போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தி கலைக்க முயன்றனர்.

இந்நிலையில், திருவல்லிக்கேணியில் உள்ள காவல் நிலையம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துவிட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

ஆனால் நேற்று இரவு பொதுமக்களிடமிருந்து பேஸ்புக், டுவிட்டர், வாட்சாப் போன்ற நட்பு ஊடகங்களில் காணொளி ஒன்று வெளியானது. அதில் காவல்துறை உடை அணிந்தவர்களே அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களுக்கு தீ வைப்பது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன.

#TamilSchoolmychoice

நடிகர் கமல்ஹாசன் அக்காணொளியை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, இதற்கு என்ன பதில் சொல்கிறீர்கள்? என்று அரசாங்கத்திற்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

நக்கீரன் வெளியிட்டுள்ள அக்காணொளியை இங்கே காணலாம்:-