கோலாலம்பூர் – டுவிட்டரில் நேற்று வியாழக்கிழமை ‘எக்ஸ்புளோர் (Explore)’ என்ற புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி சுவாரசியமான தகவல்களையும், பக்கங்களையும் தேட முடியும் என்று டுவிட்டர் தெரிவித்துள்ளது.
தற்போது ஆப்பிள் கருவிகளுக்கு மட்டும் இவ்வசதி பயன்பாட்டிற்கு வந்துள்ளது, எதிர்வரும் வாரங்களில் அண்டிரோய்டு கருவிகளுக்கும் இவ்வசதி செய்து கொடுக்கப்படும் என்றும் டுவிட்டர் அறிவித்துள்ளது.
டுவிட்டரில் இன்றைய சுவாரசியங்கள், நிகழ்வுகள், நேரலை காணொளிகள் போன்றவற்றை ‘எக்ஸ்புளோர்’ வசதியைப் பயன்படுத்தி அறிந்து கொள்ள முடியும் என்றும், தற்போது வரை இந்த வசதிகளைப் பெற ஒவ்வொரு முறையும் வேறு வேறு இடங்களில் சென்று தேடிக் கொண்டிருக்கிறோம் என்றும் நேற்று அதன் வடிவமைப்பாளர் ஏஞ்செலா லாம் தனது வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.