Home Featured கலையுலகம் இன்ஸ்டாகிராம் பதிவுகள் – ஜெனிப்பர் லோப்பசின் புதிய காதலர்!

இன்ஸ்டாகிராம் பதிவுகள் – ஜெனிப்பர் லோப்பசின் புதிய காதலர்!

1007
0
SHARE
Ad

jennifer lopez-instagram.2nd photo.feature

வயது 47 ஆகிவிட்டது. 8 வயதான, ஆண்-பெண் என இரட்டைக் குழந்தைகளின் தாய். இருந்தாலும், கட்டுடல் குலையவில்லை. துள்ளாட்டம் குறையவில்லை. இன்றைக்கும் கோடிக்கணக்கான டாலர்களில் சம்பளம் வாங்கும் ஹாலிவுட் பட நடிகை. மேடை நிகழ்ச்சிகளை உலகில் எங்கு நடத்தினாலும், கட்டுக் கடங்காத கூட்டத்தை ஈர்க்கும் கவர்ச்சித் தாரகை. இனிய குரல் வளம் படைத்த மேடைப் பாடகி. அதிலும் இவர் பாடிய பாடல்கள் இதுவரையில் இலட்சக்கணக்கான எண்ணிக்கையிலான இசைத்தட்டுகளாக விற்பனையாகியுள்ளன.

இருந்தாலும், அடிக்கடி, ஏறத்தாழ தினசரி என்ற அளவில், தனது அழகுப் படங்களை தனது இலட்சக்கணக்கான இரசிகர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றத் தவறுவதில்லை இவர்.

#TamilSchoolmychoice

jennifer lopez-instagram.2nd photoநிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள – தனது ஆடை வடிவமைப்பாளருடன் உடையை ஒழுங்குபடுத்தும், படத்தை அண்மையில் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார் ஜெனிப்பர் லோப்பஸ்

jennifer lopezஇன்ஸ்டாகிராமில் லோப்பஸ் பதிவேற்றிய இந்தப் படத்தில் அவருடன்  நெருக்கமாக இருப்பவர் டிரேக் என்ற பாடகர்.

இன்ஸ்டாகிராமில் டிரேக் என்ற பாடகருடன் நெருக்கமாக இருக்கும் படத்தை லோப்பஸ் அண்மையில் பதிவேற்றியதும், ஊடகங்களின் மத்தியில் வதந்தித் தீ பரபரவென பற்றிக் கொண்டது. ஏற்கனவே விவாகரத்தாகிவிட்ட லோப்பசின் புதிய காதலர் இவர்தான் எனக் கொளுத்திப் போட்டன ஊடகங்கள்.

டிரேக்குடன் ஓர் இசைப் பாடலில் இணைந்து நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாக ஜெனிப்பர் லோப்பசே பேட்டிகளில் கூறியிருந்தார். மற்றபடி டிரேக்குடனான தனது தொடர்பை மறுக்கவும் இல்லை, மறைக்கவும் இல்லை.

இருந்தாலும், இருவரும் இணைந்தும், நெருக்கமான நிலையிலும் அடிக்கடி பொது இடங்களில் காணப்படுவதாகவும், இதனால் ஜெனிப்பர் லோப்பசின் புதிய காதலன் டிரேக்தான் என அடித்துக் கூறுகின்றன ஹாலிவுட் ஊடகங்கள்.

jennifer lopez peoples choice awardsஜெனிப்பர் லோப்பசின் மற்றொரு இன்ஸ்டாகிராம் பதிவு – பியூப்பல்ஸ் சாய்ஸ் விருதுகள் நிகழ்ச்சியில் அவர் அண்மையில் கலந்து கொண்டபோது….

படங்கள் – நன்றி – இன்ஸ்டாகிராம்.

-செல்லியல் தொகுப்பு