Home Featured இந்தியா ‘நான் வங்கிகளில் கடன் வாங்கவே இல்லை’ – மல்லையா திடீர் அறிக்கை!

‘நான் வங்கிகளில் கடன் வாங்கவே இல்லை’ – மல்லையா திடீர் அறிக்கை!

929
0
SHARE
Ad

vijay mallaiyaபுதுடெல்லி – வங்கிகளில் 9000 கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு தலைமறைவாகியதாகக் குற்றம் சாட்டப்படும் கிங்பிஷர் குழுமத் தலைவர் விஜய் மல்லையா, தான் எந்த வங்கியிலும் கடன் வாங்கவில்லை என்றும், தன் மீது ஊடகங்கள் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துவதாக திடீர் அறிக்கை விடுத்துள்ளார்.

மல்லையாவின் இந்த அறிக்கை சம்பந்தப்பட்ட வங்கிகளையும், மல்லையா மீது பல்வேறு வழக்குகளைப் பதிவு செய்து தேடி வரும் அமலாக்கப் பிரிவுக்கும், குற்றப்புலனாய்வுத் துறைக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது மல்லையாவை, மீண்டும் இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.