Home Featured நாடு மலேசியாவிற்கான அமெரிக்கத் தூதர் கமலா, சாஹிட்டைச் சந்தித்தார்!

மலேசியாவிற்கான அமெரிக்கத் தூதர் கமலா, சாஹிட்டைச் சந்தித்தார்!

661
0
SHARE
Ad

Kamalaகோலாலம்பூர் – புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள மலேசியாவிற்கான அமெரிக்கத் தூதர் கமலா ஷிரின் லாக்திர் இன்று வெள்ளிக்கிழமை துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடியை அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.

இச்சந்திப்பில், அமெரிக்காவிற்கும், மலேசியாவிற்கும் இடையிலான நட்புறவு குறித்தும், அமெரிக்கா விசா திட்டங்கள், மனிதக் கடத்தல், தூதரக விவகாரங்கள், உலகப் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் பேசப்பட்டதாக சாஹிட் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.