Home Featured நாடு பாஸ்-பெர்சாத்து இடையில் தேர்தல் உடன்பாடு பேச்சு வார்த்தை!

பாஸ்-பெர்சாத்து இடையில் தேர்தல் உடன்பாடு பேச்சு வார்த்தை!

745
0
SHARE
Ad

zaid-ibrahimகோலாலம்பூர் – எதிர்வரும் வியாழக்கிழமை பிப்ரவரி 2-ஆம் தேதி மொகிதின் யாசின் தலைமையிலான பார்ட்டி பிரிபூமி பெர்சாத்து மலேசியா கட்சிக்கும், பாஸ் கட்சிக்கும் இடையிலான 14-வது பொதுத் தேர்தல் உடன்பாடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன.

இந்தப் பேச்சு வார்த்தைகள் வெற்றி பெற்றால் பெர்சாத்து கட்சிக்கும், பாஸ் கட்சிக்கும் இடையில் 14-வது பொதுத் தேர்தலில் தொகுதிகள் பங்கீடுகள் உள்ளிட்ட பல விவகாரங்களில் உடன்பாடுகள் காணப்படும். விரைவில் எதிர்பார்க்கப்படும் பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிகள், ஒருவருக்கொருவர் மோதிக் கொள்ளும் நிலைமையைத் தவிர்த்து, தேசிய முன்னணியுடன் நேரடி மோதலின் ஈடுபட்டு, வெற்றி பெறுவதற்கான சாத்தியங்களும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முன்னாள் அம்னோ அமைச்சரும், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் பாடுபட்டு வருபவருமான சைட் இப்ராகிம் (படம்)  இந்தத் தகவலைத் தனது வலைப் பதிவில்  வெளியிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

பாஸ் கட்சி தேசிய முன்னணிக்கு எதிரான நிலைப்பாடு எடுக்காததைச் சுட்டிக் காட்டி, பாஸ் கட்சியுடனான ஒத்துழைப்புக்கான காலம் கடந்து விட்டது என்றும், பாஸ் இல்லாமலேயே பெர்சாத்து கட்சி கூட்டணி தேசிய முன்னணியை வீழ்த்தும் என்றும் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் அண்மையில் சவால் விடுத்திருந்தார்.