Home Featured இந்தியா இந்திய வரவு செலவுத் திட்டம்: முக்கிய அம்சங்கள் என்ன? (தொகுப்பு -1)

இந்திய வரவு செலவுத் திட்டம்: முக்கிய அம்சங்கள் என்ன? (தொகுப்பு -1)

727
0
SHARE
Ad

arun jaitley-presenting budget

புதுடில்லி – இன்று நிதியமைச்சர் அருண் ஜெட்லியால் அறிவிக்கப்பட்ட இந்தியாவின் வரவு செலவுத் திட்டம் இந்திய மக்களால் ஊன்றிக் கவனிக்கப்பட்டது என்பதோடு, வெளிநாட்டில் வாழும் கோடிக்கணக்கான இந்தியர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

2017-ஆம் ஆண்டுக்கான இந்திய வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து சுமார் 1 மணி 40 நிமிடங்கள் அருண் ஜெட்லி நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அந்த உரையின்  முக்கிய அம்சங்களில் சிலவற்றைப் பார்ப்போம்:

  • அனைத்து கிராமங்களுக்கும் மின்சார இணைப்பு வழங்கும் திட்டம் 2019ஆம் ஆண்டு மே மாதம் 1 ஆம் தேதிக்குள் நிறைவேற்றப்படும்.
  • கிராமப்புற மேம்பாடுகளுக்காக 24 சதவீதம் கூடுதலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சாலை வசதிகளை மேம்படுத்தவும், கிராமப்புற சுகாதார வசதிகளை மேம்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
  • பொதுமக்கள் வாங்கக் கூடிய குறைந்த விலையுடைய வீடமைப்புத் திட்டங்களுக்கு அரசாங்கம் சலுகைகள் வழங்கியுள்ளது. இத்தகைய திட்டங்களை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு அரசாங்கத்தின் ஊக்குவிப்பும், வரி சலுகைகளும், நிதிஉதவிக் கடன்களும் வழங்கப்படும்.
  • தேசிய வீடமைப்பு வங்கி 20,000 கோடிக்கான வீட்டுக் கடன்களை வழங்கி உள்கட்டமைப்பு துறையை விரிவாக்க துணை நிற்கும்.
  • 1 கோடி குடும்பங்களையும், 50,000 கிராமத்துப் பஞ்சாயத்துகளையும் வறுமையிலிருந்து 2019-க்குள் மீட்பதற்கு அரசாங்கம் இலக்கு கொண்டுள்ளது.
  • பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் நலன்களுக்காக ஒதுக்கப்படும் தொகை 35 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • இரண்டரை இலட்சம் முதல் 5 இலட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கான வரிவிதிப்பு 10 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.