கடலில் கலந்த இந்த எண்ணெய் காரணமாக, கடல் வாழ் உயிரினங்களின் நிலை கேள்விக் குறியாகியுள்ளதாக கவலையடைகின்றனர் கடல் ஆய்வாளர்கள்.
இதுவரை கடலோரங்களில் இறந்து கிடந்த ஆமைகளின் எண்ணிக்கை 167 ஆக உயர்ந்துள்ளது. அதோடு, நண்டுகள், மீன்கள் என பல கடல் வாழ் உயிரினங்கள் இறந்த நிலையில் மிதக்கின்றன.
இது குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சட்டமன்றத்தில் வெளியிட்டுள்ள தகவலில், கடலில் 1 டன் எண்ணெய் தான் சிந்தியதாகத் தெரிவித்துள்ளார்.
ஆனால், கடந்த 3 நாட்களாக நடைபெறும் தூய்மைப்படுத்தும் பணிகளில் இதுவரை 5 டன்களுக்கும் மேல் கழிவுகள் அகற்றப்பட்டிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.
இன்னும் 3 நாட்களுக்கு தூய்மைப்படுத்தும் பணி தொடரும் என்றும் கூறப்படுகின்றது. அப்படியானால் உண்மையாக கடலில் சிந்திய எண்ணெய்யின் அளவு எவ்வளவு என்பது குறித்து மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.