புதுடில்லி – இந்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி (படம்) நேற்று சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டத்தின்படி இனி 3 இலட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட அனைத்து பரிமாற்றங்களும் காசோலை அல்லது வங்கி இணையக் கணக்குகள் மூலமாகவே மேற்கொள்ளப்பட வேண்டும். ரொக்கமாக பரிமாற்றம் செய்ய முடியாது.
இதன் மூலம் கறுப்புப் பண சுழற்சிகளும், ஊழல் பணத்தைக் கொண்டு பொருட்கள், சொத்துகள் வாங்குவதும் இனி முடிவுக்கு வருகிறது.
அரசியல் கட்சிகள் நிதி திரட்டுவதில் கட்டுப்பாடு
நேற்று சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் மற்றொரு முக்கிய அம்சம் என்னவென்றால் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் நன்கொடைகள் மீதான கட்டுப்பாடுகள் ஆகும்.
இனிமேல், அரசியல் கட்சிகளுக்கு ரொக்கமாக நன்கொடை வழங்கப்பட்டால் 2,000 ரூபாய் மட்டுமே வழங்கப்பட முடியும். அதற்கும் கூடுதலாக வழங்கப்படும் நன்கொடைகள் வங்கிக் கணக்குகள் மூலமாகவோ, காசோலைகள் மூலமாகவோ மட்டுமே வழங்க முடியும்.
தற்போது அரசியல் கட்சிகள் 20,000 ரூபாய் வரை ரொக்கமாக நன்கொடைகள் பெறும் நடைமுறை இருந்து வருகின்றது.