Home உலகம் 115 வயது உலகின் வயதான மூதாட்டி ஜப்பானில் மரணம்!

115 வயது உலகின் வயதான மூதாட்டி ஜப்பானில் மரணம்!

1075
0
SHARE
Ad

japan old ladyஜப்பான், ஜனவரி 16 – உலகின் அதிக வயதான பெண்மணியாக கருதப்பட்டவர் ஜப்பானில் உள்ள கவாசாக்கி நகரில் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

உலகின் அதிக வயதான பெண்மணி என்ற பெருமைக்கு உரியவர் ஜப்பான் நாட்டை சேர்ந்த கோட்டோ ஒக்குபோ (115). ஜப்பானில் உள்ள கவாசாக்கி நகரில் வாழ்ந்து வந்த கோட்டோ ஒக்குபோ 1897-ல் பிறந்தவர். கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கபட்ட நிலையில் காணப்பட்ட கோட்டோ கவாசாக்கி நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி கோட்டோ காலமானார்.

இவரது மறைவையடுத்து, உலகின் அதிக வயதான நபர் என்ற பெருமை, மத்திய ஜப்பானில் உள்ள கியோட்டோ பகுதியில் வாழ்ந்து வரும் ஜிரோமன் கிமுரா (115 வயது) என்பவரை சென்றடைந்துள்ளது.

#TamilSchoolmychoice

உலக அளவில், பிற நாடுகளோடு ஒப்பிட்டு பார்த்தால் மக்களின் ஆயுட்காலம் மிக அதிகமாக இருப்பது ஜப்பானில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.