Home Featured தொழில் நுட்பம் பெங்களூரில் ஐபோன் தொழிற்சாலை – கர்நாடக அமைச்சர் அறிவிப்பு!

பெங்களூரில் ஐபோன் தொழிற்சாலை – கர்நாடக அமைச்சர் அறிவிப்பு!

1013
0
SHARE
Ad

apple - iphone 6cபெங்களூர் – இனி ஐபோன்கள் இந்தியத் தயாரிப்பாகவும் இருக்கப் போகின்றது. காரணம், கர்நாடக மாநிலம் பெங்களூரில் மிக விரைவில் ஆப்பிள் தொழிற்சாலை ஒன்று அமையவுள்ளதாக நேற்று வியாழக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இது குறித்து கர்நாடக மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பிரியங் கார்ஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெங்களூரில் ஐபோன்கள் தயாரிக்க ஆப்பிள் நிறுவனத்திற்கு எண்ணம் இருந்தது. உலகின் மிகவும் மதிப்பு மிக்க நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள் தனது முதற்கட்ட உற்பத்தியை இங்கு தொடங்கவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். கர்நாடகாவில் ஆப்பிள் நிறுவனம் அமைவது இம்மாநிலத்திற்கு கூடுதல் மதிப்பைக் கொடுகின்றது” என்று குறிப்பிட்டார்.

மேலும், வரும் ஜூன் மாதம் முதற்கட்ட உற்பத்தி தொடங்கப்படலாம் என்றும் பிரியங் கார்ஜ் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இதன் மூலம், உலகளவில் ஐபோன் பாகங்களை ஒருங்கிணைக்கும் (Assemble) மூன்றாவது நாடாக இந்தியா சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.