Home கலை உலகம் நயன்தாராவுக்கு பிரியாணி விருந்து கொடுத்தது ஏன்? -ஆர்யா விளக்கம்

நயன்தாராவுக்கு பிரியாணி விருந்து கொடுத்தது ஏன்? -ஆர்யா விளக்கம்

734
0
SHARE
Ad

arya-n-nayantaraசென்னை, மார்ச்.21- நடிகை நயன்தாரவுக்கும், ஆர்யாவுக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளதாக கிசு கிசுக்கள் பரவியுள்ளன.

ஏற்கனவே பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் இருவரும் ஜோடியாக நடித்தார்கள். தற்போது வலை, ராஜா ராணி, படங்களிலும் இணைந்து நடிக்கிறார்கள்.

பிரபு தேவாவுடனான காதலை முறித்துவிட்டு நயன்தாரா மீண்டும் நடிக்க வந்ததை ஆர்யா விருந்து வைத்து கொண்டாடியதாக கூறப்பட்டது.

#TamilSchoolmychoice

அப்போது நயன்தாராவை ஆர்யா தனது வீட்டுக்கு அழைத்தார். அங்கு அவருக்கு ருசியான பிரியாணி விருந்து அளித்தார். இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது என்று திரையுலகினர் பேசிக் கொள்கிறார்கள். இது குறித்து ஆர்யாவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

எனது வீட்டில் அம்மா சுவையாக பிரியாணி சமைப்பார். நிறைய பேர் அதை சாப்பிட்டு விட்டு ருசியாக இருந்ததாக மற்றவர்களிடம் சொல்லி உள்ளனர்.

எனவே நிறைய பேர் பிரியாணி சாப்பிட ஆர்வமாக இருந்தார்கள். அவர்களுக்காக வீட்டில் விருந்து வைத்தேன். நயன்தாராவும் அந்த விருந்துக்கு வந்தார்.

மேலும் பல நடிகர்கள் மற்றும் இயக்குனர்களும் வந்து இருந்தார்கள். நயன்தாராவுக்கு மட்டும்தான் பிரியாணி விருந்து வைத்தேன் என்று வதந்தி பரப்பி விட்டார்கள். திருமணத்துக்கு நான் பெண் தேடுகிறேன். பொருத்தமான பெண் கிடைத்ததும் திருமணம் செய்து கொள்வேன். இவ்வாறு ஆர்யா கூறினார்.