Home இந்தியா ஸ்டாலின் வீட்டில் சிபிஐ சோதனை

ஸ்டாலின் வீட்டில் சிபிஐ சோதனை

564
0
SHARE
Ad

indexசென்னை, மார்ச் 21- இந்தியாவில் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து திமுக விலகிய மறுநாளே அக்கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் இல்லத்தில் மத்திய புலனாய்வுத்துறை சிபிஐ யின் அதிகாரிகள் சோதனை நடத்தியிருக்கின்றனர்.

சென்னை தேனாம்பேட்டையில் இருக்கும் அவ்வீட்டில் வியாழன் காலையில் சோதனை நடைபெற்றது. அதே போல், சென்னை திருமூர்த்தி நகரில் இருக்கும் ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் ராஜசங்கர் வீட்டிலும் சோதனை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது,

இரண்டாண்டுகளுக்கு முன் வருவாய்ப் புலனாய்வுத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அலெக்ஸ் என்பவர் மூலம் ஹம்மர் எனப்படும் சொகுசுக்காரை உதயநிதி வாங்கினார் என்பதே வழக்கு.

#TamilSchoolmychoice

புதுடில்லியிலிருந்து பெறப்பட்ட உத்தரவின்  பேரில்   சோதனை அல்லது விசாரணை துவங்கிய வேகத்திலேயே முடிக்கப்பட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.

மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் சிபிஐ சோதனைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

‘அரசியல் நோக்கத்துடன் மிரட்டும் வகையில் இந்த சோதனை  நடத்தப்பட்டுள்ளது. எதுவாக இருந்தாலும் சட்டப்படி சந்திக்கத் தயாராக இருக்கிறோம்’ என ஸ்டாலின் தெரிவித்தார்.

ஆனால் அவரது தந்தையும் திமுக தலைவருமான மு.கருணாநிதி, சிபிஐயின் நடவடிக்கைகளுக்கு ஆளும் காங்கிரசின் காழ்ப்புணர்ச்சியே காரணம் எனக் கூறிவிடமுடியாது என்று செய்தியாளர்களிடம் கூறினார்.