Home Featured தமிழ் நாடு மக்களின் ‘வாழ்க’ முழக்கம் பெற்ற ஓபிஎஸ்! போயஸ் கார்டனில் குவிந்த அமைச்சர்கள்!

மக்களின் ‘வாழ்க’ முழக்கம் பெற்ற ஓபிஎஸ்! போயஸ் கார்டனில் குவிந்த அமைச்சர்கள்!

502
0
SHARE
Ad

O-Panneerselvam

சென்னை – செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தமிழக அரசியல் மீண்டும் ஒரு பரபரப்பான இரவாக நகர்ந்து கொண்டிருக்கின்றது. ஜெயலலிதா நினைவிடம் வந்து சுமார் அரை மணி நேரம் தியான நிலையில் அமர்ந்த பின்னர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர் செல்வம் சில ‘அணுகுண்டுகளை’ வெடித்திருக்கிறார்.

அவரது தியானம் முடிவதற்குள் பத்திரிக்கையாளர்களும், பொதுமக்களுமாக ஜெயலலிதா நினைவிடத்தில் குழுமி விட்டனர். அவர்கள் அனைவரும் ‘பன்னீர் செல்வம் வாழ்க’ என முழக்கமிட்டதோடு, நாங்கள் உங்கள் பின்னால் இருப்போம் என்றும் முழங்கினர்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில், அதிமுகவின் அமைச்சர்களும், முக்கியத் தலைவர்களும் போயஸ் கார்டனுக்கு சென்று அங்கு சசிகலாவுடன் கலந்தாலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.