Home Featured நாடு பத்துமலை தைப்பூசத்திற்கு டத்தோ தெய்வீகன் வருகை

பத்துமலை தைப்பூசத்திற்கு டத்தோ தெய்வீகன் வருகை

844
0
SHARE
Ad

thaipusam-feature-deiveeganகோலாலம்பூர் –  தைப்பூசத் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று புதன்கிழமை காலை பத்துமலை வந்த மலேசியக் காவல்துறையின் ஆணையரும் (கமிஷனர்) புக்கிட் அமான் வணிகக் குற்றப் பிரிவுக்கான துணைத் தலைவருமான டத்தோ ஏ.தெய்வீகனுக்கு சிறப்பான வரவேற்பு நல்கப்பட்டு, பத்துமலை ஆலயத்தின் சார்பில் மரியாதையும் வழங்கப்பட்டது.

thaipusam-2017-deiveegan-batu cavesபத்துமலை தைப்பூசத்திற்கு வருகை தந்த தெய்வீகனுக்கு ஆலயத்தின் சார்பில் மரியாதை வழங்கப்பட்டது…

தெய்வீகன் பத்துமலை மேல்குகைக் கோயிலுக்கு வருகை தந்தபோது அங்கு குழுமியிருந்த பக்தர்களில் பலரும், மாணவர்களும் அவருடன் புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் காட்டினர்.

#TamilSchoolmychoice

பின்னர் பத்துமலை அடிவாரத்தில் அமைக்கப்பட்டிருந்த காவல் துறையினரின் தண்ணீர்ப் பந்தலுக்கு வருகை தந்த தெய்வீகன், தண்ணீர்ப் பந்தலில் இருந்தபடி பக்தர்களுக்கு குளிர் பானங்களை வழங்கினார்.

thaipusam-deiveegan-thanneer panthal-frontஅரச மலேசிய காவல் துறையினர், பக்தர்களின் நன்மைக்காக அமைத்திருந்த தண்ணீர்ப் பந்தல் முகப்பில் தெய்வீகன்

thaipusam-deiveegan-thanneer panthalதண்ணீர்ப் பந்தலில் இருந்தபடி பக்தர்களுக்கு குளிர்பானம் வழங்கும் தெய்வீகன்…

Thaipusam-deiveegan-காவல்துறையின் தண்ணீர்ப் பந்தலில் தெய்வீகன்…

-செல்லியல் தொகுப்பு