Home Featured தமிழ் நாடு ஆளுநரை 15 நிமிடங்கள் மட்டுமே சந்தித்தார் ஓபிஎஸ்!

ஆளுநரை 15 நிமிடங்கள் மட்டுமே சந்தித்தார் ஓபிஎஸ்!

616
0
SHARE
Ad

OPS

சென்னை – இன்று வியாழக்கிழமை மாலை 5.00 மணிக்கு ஆளுநர் மாளிகைக்குச் சென்ற நடப்பு முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், சுமார் 15 நிமிடங்கள் மட்டுமே ஆளுநர் வித்யாசாகர் ராவ்வுடன் சந்திப்பு நடத்தினார். அதன் பின்னர் ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியேறிய ஓ.பன்னீர் செல்வம் தனது இல்லம் வந்தடைந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர் செல்வம் சுருக்கமாக, “நல்லதே நடக்கும். தர்மம் வெல்லும்” என்று கூறினார்.

#TamilSchoolmychoice

தொடர்ந்து இரவு 7.30 மணியளவில் (இந்திய நேரம்) சசிகலாவை ஆளுநர் சந்திக்கவிருக்கிறார்.

சசிகலா முதலில் ஜெயலலிதா நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தி விட்டு பின்னர் ஆளுநர் மாளிகை செல்கிறார்.