Home Featured நாடு “குடியுரிமை பிரச்சனை தீர்க்கப்படும் – பத்துமலையில் கலாச்சார மையம் நிறுவ முயற்சி” சுப்ரா!

“குடியுரிமை பிரச்சனை தீர்க்கப்படும் – பத்துமலையில் கலாச்சார மையம் நிறுவ முயற்சி” சுப்ரா!

1033
0
SHARE
Ad

thaipusam-2017-zahid-subra-waving

கோலாலம்பூர் –  இன்று வியாழக்கிழமை காலை துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி பத்துமலை தைப்பூசத் திருவிழாவில் கலந்து கொள்ள பத்துமலை வந்தபோது நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் உரையாற்றினார்.

துணைப் பிரதமர் முன்னிலையில் டாக்டர் சுப்ரா ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்:-

  • இந்த விழாவில் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹாமிடி கலந்து கொண்டுள்ளது இந்திய சமுதாயத்திற்கு நமது அரசாங்கம் காட்டி வரும் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.
  • நமது நாட்டின் பல இன, பல கலாச்சாரக் கொண்டாட்டங்களின் இன்னொரு பிரதிபலிப்பாகத் திகழ்வதுதான் தைப்பூசத் திருவிழா.
  • அனைத்து மதங்களுக்கும் உரிய இடத்தையும், வாய்ப்புகளையும் நமது அரசியல் அமைப்பும் அரசாங்க நடைமுறைகளும் வழி வகுத்துத் தந்துள்ளன. நமது நாட்டின் பல இன, மத நல்லிணக்கத்தை நாம் தொடர்ந்து பேணிக்காத்து வரவேண்டும். எந்தத் தரப்பிலிருந்தும் நமது மத ஒற்றுமைக்கு பங்கம் வர, அச்சுறுத்தல் ஏற்பட நாம் அனுமதிக்கக்கூடாது.
#TamilSchoolmychoice

குடியுரிமை மீதான பிரச்சனைகள் தீர்த்து வைக்கப்படுகின்றன

thaipusam- 2017-zahid hamidi-subra-துணைப் பிரதமர் சாஹிட், டாக்டர் சுப்ரா கலந்து கொண்ட நிகழ்ச்சியைக் கண்டு களித்த திரளான மக்கள்…

  • இந்திய சமுதாயத்தில் குடியுரிமை விண்ணப்பங்கள் தொடர்பிலான பிரச்சனைகளை நமது துணைப்பிரதமர் தலைமையின் கீழ் இயங்கி வரும் உள்துறை அமைச்சுடன் இணைந்து தீர்த்து வைக்கத் தொடர்ந்து பாடுபட்டு வருகிறோம் என்பதை இந்த வேளையில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
  • இதுவரையில் உள்துறை அமைச்சரின் ஒத்துழைப்புடன் சுமார் 4,800 இந்தியர்களுக்கு குடியுரிமை பெற்றுத் தருவதில் மஇகா சார்பில் நாங்கள் பாடுபட்டு வெற்றியடைந்துள்ளோம்.
  • மேலும் 500 இந்தியர்களுக்கான குடியுரிமை விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும், கூடிய விரைவில் அந்த குடியுரிமைகள் வழங்கப்படும் என்றும் நாங்கள் அறிகிறோம்.
  • மேலும் 2,000 இந்தியர்களின் குடியுரிமை விண்ணப்பங்கள் பல்வேறு கட்டங்களில் பரிசீலனையில் இருந்து வருகின்றன எனவும் நாங்கள் அறிந்துள்ளோம்.
  • இந்தியர்களின் குடியுரிமைப் பிரச்சனைகள் தொடர்பில் அதனைத் தீர்த்து வைக்கும் நோக்கத்துடன் பாடுபட்டு வரும் உள்துறை அமைச்சரும் துணைப் பிரதமருமான டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி உள்துறை அமைச்சில் இதற்கென சிறப்பு அதிகாரிகளை நியமித்துள்ளார் என்பதையும் அவர்கள் எங்களுடன் அணுக்கமாக இணைந்து இந்தப் பிரச்சனையைத் தீர்க்கச் செயல்பட்டு வருகிறார்கள் என்பதையும் இந்த வேளையில் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். எனவே, நாம் அனைவரும் இணைந்து பாடுபட்டால், உள்துறை அமைச்சர் தந்து வரும் ஒத்துழைப்பு காரணமாக, இந்தியர்களின் குடியுரிமைப் பிரச்சனையை கூடிய விரைவில் சுமுகமான முறையில் தீர்த்து வைத்து விடலாம் என நம்புகிறேன்.

தேசிய உருமாற்றுத் திட்டம் 2050

Thaipusam-2017-zahid hamidiதைப்பூசத் திருவிழாவில் கலந்து கொண்ட மக்களிடையே துணைப் பிரதமர்…

  • அண்மையில் நமது பிரதமர் தேசிய உருமாற்றத் திட்டம் 2050 என்ற திட்டத்தை, அடுத்த 34 ஆண்டுகளில் நாட்டின் தேசிய வளர்ச்சியை எவ்வாறு உருமாற்றுவது என்ற நோக்கத்தோடு வெளியிட்டுள்ளார்.
  • மலேசிய சமுதாயத்தின் அனைத்துத் தரப்புகளில் இருந்தும் கருத்துக்களைக் கேட்டு, அந்தக் கருத்துக்களை ஒருங்கிணைத்து அதன் மூலம் 2050-ஆம் ஆண்டுக்குள் நாட்டின் தேசிய உருமாற்றத்தை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து இந்தத் திட்டம் விவரிக்கிறது.
  • டிஎன் 50 என்று அழைக்கப்படும் இந்தத் திட்டம் வெற்றியடைய மஇகா முழு ஒத்துழைப்பு வழங்கும் என்பதோடு, இந்திய சமுதாயத்தின் பல்வேறு தரப்புகளில் இருந்தும் கருத்துகளைக் கேட்டறிந்து, அந்தக் கருத்துகளை டிஎன் 50 திட்டக் குழுவின் பரிசீலனைக்கு வழங்கும் என்றும் இந்த வேளையில் நான் உறுதி கூற விரும்புகின்றேன்.

பத்துமலையில் இந்தியர் கலாச்சார மையம்

Thaipusam-batu caves-8 feb-morning

  • பத்துமலை வளாகம் இந்துப் பெருமக்களின் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றும் தலமாகவும், அவர்களின் மத நம்பிக்கைகளைப் பிரதிபலிக்கும் வண்ணம் அவர்கள் கூடுகின்ற இடமாகவும் மட்டுமின்றி, சுற்றுலாப் பயணிகள் ஆயிரக்கணக்கில் வருகை தருகின்ற சுற்றுலாத் தலமாகவும் மாறியுள்ளது.
  • மலேசியா வரும் சுற்றுலாப் பயணிகள் காணவிரும்பும் மையமாக பத்துமலை வளாகம் உருவெடுத்துள்ளது. எனவே, இதனை ஓர் சிறந்த சுற்றுலா மையமாக உருமாற்றவும், நிர்மாணிக்கவும் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் பத்துமலைத் திருத்தலத்தை சிறந்த சுற்றுலா மையமாக உருமாற்ற எடுத்து வரும் முயற்சிகளுக்கு அரசாங்கம் துணை நிற்க வேண்டும் என்றும் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமருடனும், சுற்றுலாத் துறை அமைச்சருடனும் விவாதித்துள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
  • பத்துமலை வளாகத்தில் இந்தியர் கலாச்சார மையம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என ஆலயத் தலைவர் டான்ஸ்ரீ நடராஜா கேட்டுக் கொண்டுள்ளார். அந்தக் கோரிக்கையையும் நான் பிரதமரின் பார்வைக்குக் கொண்டு சென்றிருக்கிறேன். நமது அரசாங்கத்தின் ஆதரவும், அனுமதியும், ஒத்துழைப்பும் இந்தத் திட்டத்திற்கு கிடைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் நான் மேற்கொள்வேன் என்றும் உறுதி கூற விரும்புகின்றேன்.

-செல்லியல் தொகுப்பு