Home Featured கலையுலகம் இன்ஸ்டாகிராம் பதிவுகள்: ‘காற்று வெளியிடை’ அதிதி – கவர்ச்சியிலும் கிறங்கடிக்கிறார்!

இன்ஸ்டாகிராம் பதிவுகள்: ‘காற்று வெளியிடை’ அதிதி – கவர்ச்சியிலும் கிறங்கடிக்கிறார்!

1595
0
SHARE
Ad

Aditi2சென்னை – அதிதி ராவ் ஹைதாரி.. இவர் தான் இயக்குநர் மணிரத்னத்தின் புதிய படமான ‘காற்று வெளியிடை’-ன் கதாநாயகி. ‘வான் வருவான்.. வருவான்’ என்று கடந்த சில வாரங்களாக இளைஞர்களை உருக்கிக் கொண்டிருப்பவர். பாலிவுட்டில் மிகவும் பிரபலம்.

மலையாளத்தில் மம்முட்டி படத்தில் அறிமுகமாகி, அடுத்து தமிழில் ‘சிருங்காரம்’ என்ற படத்தில் நடித்துவிட்டு, அடுத்து பாலிவுட்டில் கால்பதித்து தற்போது வரை அங்கு ரசிகர்களைக் கிறங்கடித்துக் கொண்டிருப்பவர்.

Adti1மேலாடை இன்றி வார இதழ்களின் முன்பட அட்டைக்குப் தாராளம் காட்டுவது, அவ்வப்போது ஏடாகூடமாக படங்களை எடுத்து இணையத்தில் விடுவது, இன்ஸ்டாகிராமில் கண்ணைக் கவரும் தம்படங்களை வெளியிடுவது என அதிதி எப்போதும், சர்ச்சைகளுடன் கூடிய சினிமா வெளிச்சம் பட்டவாறே இருக்கும் பிரபலம்.

#TamilSchoolmychoice

Aditi3உடற்பயிற்சிகள், யோகா, நடனம் என பல்வேறு பயிற்சிகளில் ஆர்வம் காட்டும் அதிதி, எப்போதும்  தன்னை இளமையாக வைத்துக் கொள்வதில் கில்லாடி.

Aditi5அதனால் தான், ‘காற்று வெளியிடை’ திரைப்படத்தில், கொஞ்சம் வயது முதிர்ந்த கதாநாயகியாகவும் இருக்க வேண்டும், அதேநேரத்தில் இளமையும், அழகும் நிரம்பியவராக இருக்க வேண்டும் என்று இயக்குநர் மணிரத்னம் தேடிய போது அவரது கண்ணில் சிக்கினார்.

இப்போது, தமிழ் சினிமா ரசிகர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பும் ‘காற்று வெளியிடை’ மீது இருக்கும் நேரத்தில், யாருடா அந்த கதாநாயகி என்று அதிதியைத் தேடவும் வைத்திருக்கிறது.

KVIஅப்புறம்.. இன்னொரு முக்கியமான தகவல், ‘காற்று வெளியிடை’ படத்திற்குப் பிறகு அதிதி மீது அதீதமாக யாராவது காதல் கொண்டால், அவரது முன்னாள் கணவர் சத்யதீப் மிஷ்ராவும், தற்போது கிசுகிசுக்கப்படும் புதிய காதலரும் சண்டைக்கு வர வாய்ப்பிருக்கிறது. ஆம்.. அதீதி.. ஏற்கனவே திருமணமானவர் என்பது கூடுதல் தகவல்.

தொகுப்பு: செல்லியல்