Home Featured நாடு 1 நாடாளுமன்ற உறுப்பினர், 3 சட்டமன்ற உறுப்பினர்கள் ஜசெகவில் இருந்து விலகினர்!

1 நாடாளுமன்ற உறுப்பினர், 3 சட்டமன்ற உறுப்பினர்கள் ஜசெகவில் இருந்து விலகினர்!

613
0
SHARE
Ad

DAP-Logo-Featureகோலாலம்பூர் – கட்சிக் கட்டுப்பாட்டுக்கும், கட்டுக் கோப்புக்கும் பெயர் போன ஜனநாயக செயல் கட்சியிலும் (ஜசெக) சலசலப்பு எழுந்துள்ளது. அக்கட்சியின் தலைமைத்துவத்தின் மீது தங்களின் அதிருப்தியைக் காரணம் காட்டி, 1 நாடாளுமன்ற உறுப்பினரும், 3 சட்டமன்ற உறுப்பினர்களும் அக்கட்சியிலிருந்து விலகியுள்ளனர்.

கோத்தா மலாக்கா நாடாளுமன்ற உறுப்பினர் சிம் தோங் ஹிம்,  சட்டமன்ற உறுப்பினர்கள் கோ லியோங் சாங் (டுயோங் தொகுதி மலாக்கா), லிம் ஜாக் வோங் (பாச்சாங் தொகுதி, மலாக்கா), சின் சுங் சியோங் (கெசிடாங் தொகுதி மலாக்கா)  ஆகிய நால்வரும் அக்கட்சியிலிருந்து உடனடியாக விலகுவதாக அறிவித்துள்ளனர்.

கட்சியின் தலைமைத்துவம் தனது இலக்குகளிலிருந்து விலகிவிட்டது என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

#TamilSchoolmychoice

இவர்களில் சிம் தோங் ஹிம், கோ லியோங் சாங் ஆகிய இருவரும் கடந்த ஆண்டு பிப்ரவரியில் கட்சிக் கட்டுப்பாடை மீறியதற்காக ஓராண்டுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.