Home Featured தமிழ் நாடு புதன் அல்லது வியாழன் அன்று சசிகலா வழக்கில் தீர்ப்பு!

புதன் அல்லது வியாழன் அன்று சசிகலா வழக்கில் தீர்ப்பு!

808
0
SHARE
Ad

sasikala-panneer selvamசென்னை – சொத்துக் குவிப்பு வழக்கில் இந்த வாரம் புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை தீர்ப்பு வெளியாகலாம் என மத்திய அரசாங்க முன்னாள் தலைமை வழக்கறிஞர் சோலி சொராப்ஜி கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், “சசிகலா தமிழக முதல்வராகப் பதவி ஏற்பதில் முடிவு சொல்ல ஆளுநர் வித்யாசாகர் ராவ் காலம் தாழ்த்தி வருவது சரி தான். அடுத்த வாரம் புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை தீர்ப்பு வெளியாகலாம். அவ்வாறு தீர்ப்பு வெளியாகாத பட்சத்தில் ஆளுநர் அடுத்தக்கட்ட முடிவை அறிவிக்கலாம். எனவே அவரின் செயல்பாடுகளில் தவறு இல்லை” என்று தெரிவித்தார்.