Home Featured தொழில் நுட்பம் வதந்திகளைத் தடுக்கும் தொழில்நுட்பம் வேண்டும் – டிம் குக் கருத்து!

வதந்திகளைத் தடுக்கும் தொழில்நுட்பம் வேண்டும் – டிம் குக் கருத்து!

1079
0
SHARE
Ad

apple-ceo-timcookலண்டன் – ‘பொய்யான செய்திகள்’ பரப்பப்படுவதைத் தடுக்க அனைத்து தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்களது பங்களிப்பை செய்ய வேண்டும் என ஆப்பிள் நிறுவனத் தலைமைச் செயலதிகாரி டிம் குக் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து டெய்லி டெலகிராஃப் என்ற செய்தி நிறுவனத்திற்கு டிம் குக் அளித்த நேர்காணலில், “தொழில்நுட்ப நிறுவனங்களாகிய நாம், பொய்யான செய்திகளைத் தடுக்க சில கருவிகளைக் கண்டறிய வேண்டும்” என்று கூறினார்.

மேலும், “கருத்துச் சுதந்திரத்தையும், பத்திரிகை சுதந்திரத்தையும் பாதிக்காதவகையில், நாம் அதனை நசுக்க வேண்டும். ஆனால் வாசகர்களுக்கும் நான் உதவ வேண்டும். தற்போதைய சூழலில் நம்மில் பெரும்பாலானோர், என்ன செய்வதென்று தெரியாமல் புகார் கூறிக் கொண்டிருக்கும் நிலையில் இருக்கிறோம்.” என்று டிம் குக் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மேலும், கடந்த பிப்ரவரி 9-ம் தேதி, டவுனிங் ஸ்ட்ரீட்டில் பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மேயைச் சந்தித்த குக், பொதுத் தகவல் பிரச்சாரத்தை அறிமுகப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

“பொதுச்சேவை அறிவிப்பு பிரச்சாரத்தில் நவீன பதிப்பு நமக்குத் தேவைப்படுகின்றது. ஆர்வம் இருந்தால் அதனை உடனடியாகக் கொண்டு வரலாம். நாம் இப்போது இருக்கும் காலத்தில், துரதிருஷ்டவசமாக சில தரப்பு மக்கள் தங்களது நேரத்தை கிளிக் செய்வதில் தான் செலவிடுகிறார்கள். அவை பெரும்பாலும் உண்மையைச் சொல்வதில்லை. அது மக்களின் எண்ணங்களைக் கொல்கிறது. ஜோடிக்கப்பட்ட செய்திகள் எதையாவது விளம்பரப்படுத்தும் நோக்கிலேயே பரப்பப்படுகின்றன. கடந்த 2016-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரங்களில் கூட அது போன்ற செய்திகள் முக்கியத்துவம் பெற்றன” என்றும் டிம் குக் தெரிவித்தார்.

குறிப்பாக, பேஸ்புக் தற்போது இது போன்ற பொய்யான செய்திகள் பரப்பப்படுவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருப்பதாகவும் டிம் குக் குறிப்பிட்டார்.