Home Featured இந்தியா ஒரே விண்கலனில் 104 செயற்கைக் கோள்கள் – இந்தியா சாதனை!

ஒரே விண்கலனில் 104 செயற்கைக் கோள்கள் – இந்தியா சாதனை!

1046
0
SHARE
Ad

isro-rocket-launched

ஸ்ரீஹரிகோட்டா – விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல் கல்லை எட்டியுள்ள இந்தியா இன்று புதன்கிழமை இங்கிருந்து, ஒரே விண்கலனில் 104 செயற்கைக் கோள்களை ஏந்திய விண்கலன் ஒன்றை வானில் பாய்ச்சி சாதனை படைத்தது.

இது ஓர் உலக சாதனையாகும். இதற்கு முன் ரஷியா ஒரே விண்கலனில் 88 செயற்கைக் கோள்களை விண்ணில் பாய்ச்சி சாதனை புரிந்திருந்தது. ஆனால் அந்த சாதனையை தற்போது இந்தியா முறியடித்துள்ளது.

#TamilSchoolmychoice

isro-launch-104 satellitesபிஎஸ்எல்வி – சி 37 என்ற பெயருடன் வானில் பாய்ந்த விண்கலனை இந்தியக் கொடியசைத்து வழியனுப்பும் பொதுமக்கள்- பத்திரிக்கையாளர்கள்…

பிஎஸ்எல்வி – சி 37 என்ற பெயர் கொண்ட இந்த விண்கலம் ஏந்திச் சென்ற 104 செயற்கைக் கோள்களில் 3 மட்டுமே இந்தியாவுக்குச் சொந்தமானதாகும். எஞ்சிய 101 செயற்கைக் கோள்கள் மற்ற நாடுகளைச் சேர்ந்தவையாகும். இதில் 96 செயற்கைக் கோள்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவையாகும்.

அமெரிக்காவைச் சேர்ந்த செயற்கைக் கோள்களே விண்ணில் ஏவப்பட இந்திய விண்கலனைப் பயன்படுத்துவது, இந்தியாவின் விஞ்ஞான ஆராய்ச்சியின் வெற்றியை எடுத்துக் காட்டுவதாக அமைந்திருக்கிறது.

isro-satellite launch-104இஸ்ரோவின் சாதனைக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்திருக்கிறார்…

isro-launch-shoot104 satelliteவிண்ணில் சீறிப்பாயும் பிஎஸ்எல்வி – சி 37விண்கலம்…

Isro-satellite-1963-

1963-ஆம் ஆண்டு இஸ்ரோவின் செயற்கைக் கோள் விண்ணில் ஏவப்படுவதற்காக சைக்கிளில் கொண்டு செல்லப்படும் காட்சி…இங்கிருந்துதான் இன்றைய சாதனைகள் தொடங்கின…

இன்று அதிநவீன விஞ்ஞான வளர்ச்சியோடும், தொழில் நுட்பங்களோடும் இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் செயல்பட்டாலும், ஆரம்பத்தில் எளிமையோடும், தங்களின் அறிவாற்றலை மட்டுமே நம்பியும் இஸ்ரோ செயல்பட்டது. 1963-ஆம் ஆண்டில் ஏவப்பட்ட செயற்கைக் கோள் ஒரு சைக்கிளில் கொண்டு செல்லப்பட்டது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

ஆம்! அதுதான் உண்மை!

Dr‑APJ‑Abdul‑Kalamஇன்று 104 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்த விண்கலன் பற்றி நாம் பாராட்டிப் பேசும்போது, இதற்கெல்லாம் ஆரம்பத்திலேயே வித்திட்ட இந்த மாமனிதரை நம்மால் நினைவு கூராமல் இருக்க முடியுமா? இஸ்ரோவின் முன்னாள் தலைமை விஞ்ஞானியும், முன்னாள் இந்திய அதிபருமான அமரர் அப்துல் கலாம்….

-செல்லியல் தொகுப்பு