பெங்களூர் – சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவிற்கு, முதல் வகுப்பு அறை வாங்கித் தருவதற்கான முழு முயற்சியில் அவரது வழக்கறிஞர்கள் இறங்கியிருக்கின்றனர்.
மேலும், சசிகலாவை பரோலில் வெளியே கொண்டு வரும் நடவடிக்கைகளிலும் அவர்கள் தீவிரமாக இறங்கியிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.
முதல் வகுப்பு அறை பெற வேண்டுமானால், வருமான வரி செலுத்தியதற்கான ஆதாரங்களைக் காட்ட வேண்டும். எனவே சசிகலாவிற்கு விரைவில் முதல்வகுப்பு கிடைத்துவிடும் வாய்ப்பு உள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
தனி அறை, கட்டில் மெத்தை, மின்விசிறி, தொலைக்காட்சி, தனிக்கழிவறை, படிப்பதற்கு புத்தகங்கள், நாட்டு நடப்பை அறிந்து கொள்ள செய்தித்தாள்கள், காலை உணவு சப்பாத்தி, சாம்பார், தயிர், மதியம் காய்கறிகளுடன் சாதம், சாம்பார்.. வாரம் இருமுறை அசைவ உணவு இதெல்லாம் முதல் வகுப்பில் இருக்கும் வசதிகள் என்று கூறப்படுகின்றது.