சென்னை – கடந்த சனிக்கிழமை தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று திங்கட்கிழமை தலைமைச்செயலகம் வந்து முதல்வர் நாற்காலியில் அமர்ந்து தனது பணிகளைத் துவங்கினார்.
முதற்கட்டமாக இன்று 5 உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.
அதன் படி,
- தமிழகத்தில் மேலும் 500 மதுக்கடைகளை மூடுவது
- உழைக்கும் மகளிருக்கு இருசக்கர வாகனங்கள் வாங்க 20,000 ரூபாய் மானியம் வழங்குவது
- தனிவீட்டு வசதித் திட்டத்தின் கீழ் மீனவர்களுக்கு 5,000 வீடுகள் கட்டுவது
- வேலையில்லா இளைஞர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை இரட்டிப்பாக்குவது
- மகப்பேறு நிதியுதவி 12,000-த்தில் இருந்து 18,000 ஆக உயர்த்துவது
ஆகிய 5 உத்தரவுகளில் எடப்பாடி பழனிச்சாமி கையெழுத்திட்டார்.