Home Featured கலையுலகம் பிரபல தொலைக்காட்சி நிர்வாகியின் லீலையை அம்பலப்படுத்திய வரலட்சுமி!

பிரபல தொலைக்காட்சி நிர்வாகியின் லீலையை அம்பலப்படுத்திய வரலட்சுமி!

776
0
SHARE
Ad

Actress_varalakshmi_sarathkumar_Hot_Photos_Stills_in_Podaa_Podi_13சென்னை – நடிகை பாவனா, தனது முன்னாள் கார் ஓட்டுநரால் கடத்தப்பட்டு, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதை அறிந்த சரத்குமாரின் மகளான நடிகை வரலட்சுமி, பிரபல தொலைக்காட்சி நிர்வாகியை தான் சந்தித்த போது எதிர்கொண்ட மோசமான அனுபவம் குறித்து தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

“இரண்டு நாள் இதைச் சொல்லலாமா? வேண்டாமா? என்று யோசித்த பிறகே இதனை எழுதுகிறேன். இன்றைய நட்பு ஊடக உலகத்தில், உண்மையாக ஏதும் பேசினால் கூட அது தவறாக தீர்மானித்துக் கொள்ளப்படுகின்றது. அது போல் நடந்து விட வேண்டாம் என்று நினைக்கிறேன். முடிவில், இந்தச் சம்பவம் குறித்து கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்”

“பிரபல தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளுக்கான தலைவரைச் சந்தித்தேன். அரைமணி நேர சந்திப்பின் போது, “அப்புறம்.. எப்ப வெளியே சந்திக்கலாம்?” என்று அவர் என்னிடம் கேட்டார். “வேறு ஏதேனும் வேலை சம்பந்தமாகவா?” என்று நான் பதில் கேள்வி கேட்டேன். அதற்கு அவர், அற்பத்தனமாக ஒரு புன்னகை விடுத்து, இதெல்லாம் சகஜம் என்பது போல், “இல்லை .. இல்லை வேலை சம்பந்தமாக இல்லை.. மற்ற விசயங்களுக்காக” என்று தெரிவித்தார். நான் எனது அதிர்ச்சியையும், கோபத்தையும் கட்டுப்படுத்திக் கொண்டு, “மன்னிக்கவும்.. தயவு செய்து கிளம்புங்கள்” என்று கூறினேன். அதற்கு அவர், “அதனால… அவ்வளவு தானா?” என்று சிரித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார்” என்று வரலட்சுமி தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

மேலும், தான் இந்த சினிமா உலகில், வெறும் சதைத் துண்டாகப் பார்க்கப்படுவதற்காக வரவில்லை என்றும், நடிப்பில் இருந்த ஈடுபாடு காரணமாகவே வந்தேன் என்றும் வரலஷ்மி நீண்ட விளக்கம் ஒன்றை டுவிட்டரில் எழுதியிருக்கிறார்.