சட்டப்பேரவையில் தங்களை அவைக் காவலர்கள் குண்டுக்கட்டாகத் தூக்கி வெளியே எறிந்ததாகவும், சட்டையைக் கிழித்ததாகவும் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுநரைச் சந்தித்து புகார் அளித்தார்.
அதேவேளையில், முன்னாள் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ஆளுநரைச் சந்தித்து, நடந்தவைகளை விளக்கியிருப்பதோடு, அன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பை அங்கீகரிக்க வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
இந்நிலையில், அன்று சட்டப்பேரவையில் என்ன நடந்தது? என்பதை சட்டப்பேரவைச் செயலாளர் விளக்கம் அளிக்க வேண்டும் என செயலாளருக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டிருக்கிறார்.