Home Featured நாடு வடகொரிய தூதரகம் மூர்க்கத்தனமாக நடந்து கொள்கிறது – நஜிப் கருத்து!

வடகொரிய தூதரகம் மூர்க்கத்தனமாக நடந்து கொள்கிறது – நஜிப் கருத்து!

770
0
SHARE
Ad

Najib Tun Razakகோலாலம்பூர் – கிம் ஜோங் நம் கொலை விவகாரத்தில், மலேசியாவிலுள்ள வடகொரிய தூதரகம் மிகவும் மூர்க்கத்தனமாக நடந்து கொள்வதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

“அந்தத் தூதர் வெளியிட்ட அறிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது. அது தூதரக உறவின் படி மூர்க்கத்தனமானது. ஆனால் மலேசியா தனது நிலையில் உறுதியாக இருக்கிறது” என்று நஜிப் கூறினார்.

நேற்று திங்கட்கிழமை மலேசிய வெளியுறவுத்துறை அதிகாரிகளைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மலேசியாவுக்கான வடகொரிய தூதர் காங் சோல், ஜோங் நம் கொலையை விசாரணை செய்யும் மலேசிய காவல்துறை மீது நம்பிக்கை இல்லை என்று தெரிவித்தார்.

#TamilSchoolmychoice