Home Featured வணிகம் ஜியோ இலவசச் சலுகை மார்ச் 31 வரை தான்!

ஜியோ இலவசச் சலுகை மார்ச் 31 வரை தான்!

1050
0
SHARE
Ad

mukesh ambaniபுதுடெல்லி – ரிலயன்ஸ் நிறுவனத்தால் கொண்டு வரப்பட்ட ஜியோ 4 ஜி நிறுவனம், இதுவரை வழங்கி வந்த இலவசச் சலுகைகள் வரும் மார்ச் 31-ம் தேதியோடு நிறைவடைவதாக அந்நிறுவனத்தின் தலைவர் முகேஸ் அம்பானி இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் புதிய கட்டணத் திட்டங்களை ஜியோ அறிவிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆனாலும், உள்ளூர் அழைப்புகள் மற்றும் ரோமிங் அழைப்புகளுக்கான இலவசச் சலுகை தொடர்ந்து இருக்கும் என்றும் முகேஸ் அம்பானி தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

jionew_559_102416021342மேலும், ஜியோ தொடங்கப்பட்டு 170 நாட்களில் 10 கோடி வாடிக்கையாளர்கள் இணைந்திருப்பதாகத் தெரிவித்த முகேஸ் அம்பானி, நொடிக்கு 7 வாடிக்கையாளர்கள் ஜியோ சிம்மைப் பயன்படுத்தத் தொடங்கியதாகக் குறிப்பிட்டார்.

தற்போது அடிப்படைக் கட்டணமாக 99 ரூபாய் செலுத்தி ஜியோ சிம் சந்தாதாரராக ஆகலாம். அதேவேளையில் மாதந்தோறும் 303 ரூபாய் செலுத்தி நிரந்தர சந்தாதாரராகி அளவற்ற குரல் அழைப்புகளையும், இணையவசதியையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.