Home Featured நாடு வடகொரியாவுக்கான மலேசியத் தூதர் நாடு திரும்பினார்!

வடகொரியாவுக்கான மலேசியத் தூதர் நாடு திரும்பினார்!

685
0
SHARE
Ad

Mohamad Nizan Mohamadசிப்பாங் – மலேசிய அரசாங்க உத்தரவின் படி, வடகொரியாவுக்கான மலேசியத் தூதர் மொகமட் நிசான் மொகமட், இன்று புதன்கிழமை நாடு திரும்பினார்.

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் சகோதரர் கிம் ஜோங் நம், கடந்த வாரம் மலேசிய விமான நிலையத்தில் கொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், அவரது உடலை பிரேதப் பரிசோதனை செய்யாமல், வடகொரியா அனுப்பி வைக்கும் படி, மலேசியாவில் இருக்கும் வடகொரியத் தூதரகம் தொடர்ந்து வற்புறுத்தி வந்தது.

#TamilSchoolmychoice

ஆனால், ஜோங் நம் குடும்பத்தினரின் மரபணு மாதிரியைப் பெற்று, அவரை அடையாளம் கண்டால் மட்டுமே உடலைத் தர முடியும் என்று மலேசியக் காவல்துறை உறுதியாகத் தெரிவித்தது.

ஆனால், மலேசியாவுக்கான வடகொரிய தூதர் காங் சோல், மலேசியா வேண்டுமென்றே உடலைத் தருவதில் தாமதப்படுத்துவதாகக் குற்றம் சாட்டினார்.

இதனையடுத்து, இரு நாட்டுத் தூதரக உறவில் சலசலப்பு ஏற்பட்டது. காங் சோலின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து சம்மன் அனுப்பிய மலேசிய வெளியுறவு அமைச்சு, வடகொரியாவில் இருக்கும் தமது தூதரை திரும்ப அழைப்பதாகத் தெரிவித்தது.

அந்த உத்தரவின் படி, வடகொரியாவிற்கான மலேசியத் தூதர் மொகமட் நிசான் மொகமட், இன்று காலை 9 மணியளவில், மாஸ் விமானத்தில் கோலாலம்பூர் விமான நிலையத்தை வந்தடைந்தார்.