Home Featured தமிழ் நாடு நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிரான திமுக வழக்கு: பிப் 27-க்கு ஒத்தி வைப்பு!

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிரான திமுக வழக்கு: பிப் 27-க்கு ஒத்தி வைப்பு!

806
0
SHARE
Ad

highcourt_1970547fசென்னை – கடந்த பிப்ரவரி 18-ம் தேதி, தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற, எடப்பாடி பழனிச்சாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், 122 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு அவர் வெற்றி பெற்றதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்.

அந்த நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என்று அறிவிக்கக் கூறி எதிர்கட்சியான திமுக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு இன்று புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

இந்நிலையில், அவ்வழக்கை வரும் பிப்ரவரி 27-ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது.