எனினும், விக்ரமுக்கு ஜோடியாக மீண்டும் திரிஷா தேர்ந்தெடுக்கப்படுவாரா? என்ற கேள்வி சினிமா வட்டாரத்தில் இருந்து வந்தது. மேலும், விக்ரமுடன் ஜோடி சேரவுள்ளதாக சில புதிய நடிகைகளின் பெயர்களும் கிசுகிசுக்கப்பட்டன.
இந்நிலையில், தற்போது ‘சாமி 2’ திரைப்படத்திலும் திரிஷாவே தான் நடிக்கப் போகிறார் என்பது உறுதியாகியிருக்கிறது.
இதனை தனது டுவிட்டரில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்ட திரிஷா, “இதை ஒரு வட்டம் என்று சொல்லிவிட முடியாது, ஆனால் எங்கே தொடங்கினேனோ அங்கேயே மீண்டும் இணைகிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
Comments