Home Featured கலையுலகம் மீண்டும் படப்பிடிப்பில் இணைந்த பாவனா – பிரித்விராஜ் பாராட்டு!

மீண்டும் படப்பிடிப்பில் இணைந்த பாவனா – பிரித்விராஜ் பாராட்டு!

928
0
SHARE
Ad

Malayalam-actressgjkgதிருவனந்தபுரம் – கடந்த 1 வாரமாக மிகவும் மன உளைச்சலில் இருந்த நடிகை பாவனா, தற்போது அதிலிருந்து மீண்டு வந்து, வழக்கம் போல் நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார்.

நடிகர் பிரித்விராஜுடன் ‘ஆடம்’ என்ற புதிய படத்தில் ஒப்பந்தமாகியிருந்த பாவனா, இன்று சனிக்கிழமை அதன் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

அதனைக் கண்டு மிகுவும் மகிழ்ச்சியடைந்த நடிகர் பிரித்விராஜ், தனது பேஸ்புக் பக்கத்தில் பாவனாவின் துணிச்சலை மிகவும் பாராட்டி எழுதியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

இதனிடையே, பாவனாவைக் காரில் கடத்திய கும்பலை, கைது செய்திருக்கும் கேரளா காவல்துறை அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி, பல அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டிருக்கிறது.

அக்கும்பல் பாவனாவைக் கடத்தி மிரட்டியதைப் போல், ஏற்கனவே பல நடிகைகளைக் கடத்தி மிரட்டிப் பணம் பறித்திருப்பது தெரியவந்திருக்கிறது.

இவ்வழக்கில் கேரளா திரையுலகத்தை சில முக்கியப் புள்ளிகளும் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.