இது குறித்து கார்த்திக் தனது டுவிட்டரில் வெளியிட்டிருக்கும் தகவலில், “வணக்கம். கடந்த சில நாட்களாக சுசியின் டுவிட்டர் பக்கம் சிலரால் ஹேக் செய்யப்பட்டு, எங்களுக்கும், எங்களது குடும்பத்தினருக்கும் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. நாங்கள் இன்று டுவிட்டர் பக்கத்தை சரி செய்துவிட்டோம். முன்னதாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும் அனைத்துப் பதிவுகளும் சுச்சியின் பதிவுகள் கிடையாது. முற்றிலும் பொய்யானது. அப்பதிவுகள் யார் மனதையாவது காயப்படுத்தியிருந்தால் தனிப்பட்ட முறையில் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் அனைவரின் ஆதரவிற்கும் நன்றி” என்று கார்த்திக் தெரிவித்திருக்கிறார்.
ஆனால், நடிகர் தனுஷ், சத்குரு, சிம்பு எனப் பலரையும் விமர்சித்த அப்பதிவுகள் குறித்து சுசித்ரா தரப்பில் இருந்து இதுவரை எந்த ஒரு விளக்கமும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.