Home Featured நாடு சவுதி மன்னரின் மலேசியப் பயணம் – முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன!

சவுதி மன்னரின் மலேசியப் பயணம் – முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன!

939
0
SHARE
Ad

najibகோலாலம்பூர் – சவுதி அரேபிய மன்னர் சல்மான் அப்துல்லாசிஸ் அல் சவுத், நான்கு நாட்கள் அதிகாரப்பூர்வப் பயணமாக நாளை ஞாயிற்றுக்க்கிழமை மலேசியா வரவிருகிறார்.

அவரை வரவேற்கத் தான் தயாராகி வருவதாக மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

மேலும், மலேசியாவும், சவுதி அரேபியாவும் வலுவான சகோதரத்துவ உறவைக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கும் நஜிப், சவுதி அரேபிய மன்னர் சல்மான், தனது முடிசூட்டப்பட்ட இளவரசர் மொகமட் சல்மான் மற்றும் அரசரவையைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்களுடன் மலேசியாவிற்கு முதல் முறையாக வரவிருக்கிறார் என்றும் நஜிப் குறிப்பிட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

தென்கிழக்கு ஆசியாவில் உள்ள இஸ்லாமிய நாடுகளில், அவர்கள் பார்வையிடவிருக்கும் முதல் நாடு மலேசியா தான் என்றும் நஜிப் தெரிவித்திருக்கிறார்.

சவுதி அரேபிய அரசரின் இந்த அதிகாரப்பூர்வப் பயணத்தில், இரு நாடுகளுக்கிடையில் பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவிருப்பதாகவும் நஜிப் தெரிவித்திருக்கிறார்.