சிப்பாங் – கேஎல்ஐஏ 2 எனப்படும் இரண்டாவது கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் நச்சுத் தன்மை வாய்ந்த இராசயனப் பொருட்கள் இருக்கிறதா என்பது குறித்த பரிசோதனைகள் நடத்த, நேற்று விமான நிலையம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது.
வட கொரியாவைச் சேர்ந்த கிம் ஜோங் நம், நச்சு இரசாயனம் பயன்படுத்தி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்த சுத்திகரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கேஎல்ஐஏ 2 பாதுகாப்பான இடம் என்பதை காவல் துறையினர் உறுதி செய்துள்ளனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.45 மணி முதல் 3.00 மணி வரை இந்த சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்று முடிந்த பின்னர்,சிலாங்கூர் மாநில காவல் துறைத் தலைவர் அப்துல் சமாட் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.