Home Featured நாடு மார்ச் மாத பெட்ரோல் விலையில் ஏற்றம் இல்லை!

மார்ச் மாத பெட்ரோல் விலையில் ஏற்றம் இல்லை!

851
0
SHARE
Ad

01-6-petrol-diesel-price-6300கோலாலம்பூர் – 2017ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கான பெட்ரோல், டீசல் விலைகளுக்கான அறிவிப்பின்படி ரோன் 95, மற்றும் 97 பெட்ரோல் விலைகளில் எந்தவித மாற்றமுமில்லை.

இதைத் தொடர்ந்து ரோன் 95 பெட்ரோல் ரிங்கிட் 2.30 ஆக விற்பனை செய்யப்படும். ரோன் 97 பெட்ரோல் ரிங்கிட் 2.60-ஆக விற்பனை செய்யப்படும்.

ஆனால் டீசல் 5 காசுகள் விலை ஏற்றப்பட்டிருக்கிறது. தற்போது ரிங்கிட் 2.15 ஆக இருந்து வரும் டீசல் மார்ச் மாதத்தில் ரிங்கிட் 2.20 ஆக விற்பனை செய்யப்படும்.

#TamilSchoolmychoice

ஈரோ 5 (Euro 5) எனப்படும்  டீசல் இனி ரிங்கிட் 2.30 ஆக விற்பனை செய்யப்படும். இந்த ரக டீசல் தற்போது ரிங்கிட் 2.25 ஆக விற்பனை செய்யப்படுகின்றது.

இந்த விலை மாற்றங்கள் இன்று நள்ளிரவு 12.00 மணி முதல் நடப்புக்கு வரும்.

மலேசியாவில் 2014-ஆம் ஆண்டு டிசம்பர் முதல் ஒவ்வொரு மாதம் தொடங்கும்போதும் பெட்ரோல், டீசல் விலைகள் அனைத்துலக சந்தை விலைகளின் அடிப்படையில் மறு ஆய்வு செய்யப்பட்டு புதிய விலைகள் நிர்ணயிக்கப்பட்டு வருகின்றன.