Home Featured தமிழ் நாடு ‘அம்மா கல்வியகம்’ – புதிய இணையதளம் தொடங்கினார் ஓபிஎஸ்!

‘அம்மா கல்வியகம்’ – புதிய இணையதளம் தொடங்கினார் ஓபிஎஸ்!

952
0
SHARE
Ad

OPSசென்னை – கிராமப்புற மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவும் நோக்கில், ‘அம்மா கல்வியகம்’ என்ற இணையதளத்தை தொடங்கினார் முன்னாள் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

இன்று புதன்கிழமை இதன் அறிமுக விழாவில் செய்தியாளர்களைச் சந்தித்த பன்னீர் செல்வம், ஜெயலலிதாவின் கனவுத்திட்டமான இதனை தான் தொடங்கி வைப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்தார்.

மேலும், உயர்கல்வி மாணவர்களுக்கு இத்திட்டம் பெரிதும் உதவியாக இருக்கும் என்றும், ஐஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று வெற்றியடைய இந்த இணையதளம் ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்றும் பன்னீர் செல்வம் தெரிவித்தார்.